New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/1-horz-1.jpg)
. Aamai for Eelam - இந்த கணக்கு ஒன்றிய உயிரினங்களின் முதன்மை செயலாளர். ஆமைக்கும் ஈழத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்டால்???? உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை!
விலங்குகள் எல்லாம் கையில் ஸ்மார்ட்போன்களோடு ட்விட்டரில் இயங்கி வந்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்? சிங்கம் நான் அடிச்சா தாங்க மாட்டா, நாலு மாசம் தூங்க மாட்டன்னு ட்வீட் பண்ணுச்சுனா, அத படிக்கிற மத்த மிருகங்களோட ரியாக்சன்ஸ் எப்படி இருக்கும்? இப்படியாக யோசித்து நம்ம மக்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள் பெயரில் போலி கணக்குகள் துவங்கி தற்போது நமக்கு மிகச்சரியான பொழுதுபோக்கு அம்சத்தை உருவாக்கியுள்ளனர்.
ஒன்றிய உயிரினங்கள் என்ற ஹேஷ்டேக்குகளில் பல விதமான உயிரினங்களின் பயோக்களையும், அவர்கள் பதிவு செய்துள்ள ட்வீட்களையும் நாம் இங்கே காணப் போகின்றோம். Aamai for Eelam - இந்த கணக்கு ஒன்றிய உயிரினங்களின் முதன்மை செயலாளர். ஆமைக்கும் ஈழத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்டால்???? உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை!
சூப்பரா செல்லம்
— Manoj Subramanyam (@Dravidan_Stock) June 8, 2021
ஆமைக்குஞ்சு என்று ட்விட்டர் கணக்கு இருக்கிறது. அது ஒன்றிய உயிரினங்களின் இளைஞர் அணி கணக்காம்.
டைனோசர் என்ற ஒரு கணக்கு உள்ளது. அதில் இருக்கும் பயோ என்னவென்றால் “ஒரிஜினல் ஆண்ட பரம்பரை, the beast from triassic perion".. விலங்கினங்களின் மிக முக்கியமான விலங்காக, தொன்மை காலங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் விலங்கின் படிமங்களாக இது இருப்பதால் இதில் உண்மை இருக்க தான் செய்கிறது.
தடுப்பூசி போடுங்க மக்களே... முடிஞ்ச வரைக்கும் வீட்டுல இருங்க... முககவசம் யூஸ் பண்ணுங்க... அலட்சியமா இருக்காதீங்க.. ப்ளீஸ்
— டைனோசர் 🦖 (@DinosaurOffcial) June 8, 2021
நீங்களும் எங்க இனம் மாதிரி அழிஞ்சிடாதீங்க 🙏🙏#ஒன்றியஉயிரினங்கள்
நீங்களும் எங்க இனம் மாதிரி அழிஞ்சிடாம இருக்க முகக்கவசம் அணிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறது இந்த டைனோசர்
என்னையும் ஃபாலோ பண்ணுவீங்களான்னு கேட்கும் பென்குயின் கணக்கு இது
Friends என்னையும் follow பண்ணுவிங்கள 🐧 pic.twitter.com/y2sTMqbh3W
— பென்குயின் (@PenQueen_offl) June 8, 2021
தொடர்ந்து #ஒன்றிய_உயிரினங்கள் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாவதை தொடர்ந்து பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் நன்றி தெரிவிக்கும் மமோத்.
எல்லாத்தையும் ட்விட்டர் நிர்வாகம் இன்னும் ரெண்டு மூனு நாள்ளல தூக்கிடும்.. இருந்தாலும் இன்னைக்கு எண்டெர்டெய்மென்ட்டுக்கு இது போதும் பாஸ்… பாரபட்சம் பாக்கமா அரசியல் ட்வீட்கள் தான் பகிரப்படுகிறது…
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.