பல நேரங்களில் புடவை அணிந்து கொண்டு நடக்க கூட சிரமமாக உணர்வதுண்டு. பேருந்துகளில் ஏறும் போது எதிர்கொள்ளும் துன்பங்கள் சொன்னாலும் தீராது. திருமணத்தின் போது இந்த புடவையுடன், மேலும் பல நகைகள், அலங்காரங்கள் என்று வந்தால் மூச்சு வாங்குவது கூட சிரமமான காரியமாகிவிடும். இரண்டு எட்டு எட்டு வைத்து, திருமணம் நடக்கும் மண்டபத்திற்குள் அமர்வதற்குள் பலருக்கு வேர்த்து விறுவிறுவித்துவிடும்.
இந்நிலையில் அதை எடை கொண்ட திருமணத்திற்கான லெஹாங்காவை அணிந்து கொண்டு புஷ் – அப் செய்து அந்த வீடியோக்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் ஆனா அரோரா. என்னமோ தினமும் ஜிம்மிற்கு போடும் ஆடையை போட்டுக் கொண்டு புஷ்-அப் செய்வது போன்று செய்து கொண்டிருக்கிறார்.
இதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான், பெண்கள் தங்களின் கைகளுக்கு நகப்பூச்சு அடித்து அது காயும் நேரம் வரை மட்டுமே எதுவும் செய்யாமல் இருக்க முடியும். மற்ற எந்த சவால்களையும் எதிர்த்து நீச்சல் அடிப்பவர்கள் தான் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார் ஆனா. இந்த வீடியோவை கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
சமீபத்தில் திருமணத்திற்கு செல்வதற்கு முன்பு தமிழ் மணப்பெண் ஒருவர் கையில் சிலம்பம் சுற்றிய காட்சிகளும் இது போன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil