8 மணி நேரத்திற்கு மேல் கோடி ரூபாய் கொடுத்தாலும் உழைக்கமாட்டோம் என்று இருப்பவர்களும் இன்று மாங்கு மாங்கென்று வேலை செய்யும் சூழலை வேலையில்லா திண்டாட்டங்களும், திடீர் பணி நீக்கங்களும் உருவாக்கியுள்ளன.
Viral trending video of groom with laptop : கொரோனா ஊரடங்கின் போது பல ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஒர்க் ஃப்ரம் ஹோம் பார்த்து வருகின்றனர். சில நேரங்களில் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. 8 மணி நேரத்திற்கு மேல் கோடி ரூபாய் கொடுத்தாலும் உழைக்கமாட்டோம் என்று இருப்பவர்களும் இன்று மாங்கு மாங்கென்று வேலை செய்யும் சூழலை வேலையில்லா திண்டாட்டங்களும், திடீர் பணி நீக்கங்களும் உருவாக்கியுள்ளன.
Advertisment
இந்நிலையில் தன்னுடைய திருமணத்தன்று, மண்டபத்தில் லேப்டாப்புடன் அமர்ந்திருக்கும் மணமகனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவிற்கு பலரும் பல நகைச்சுவையான கருத்துகளை பதிவு செய்துள்ளனர். சிலரோ இதென்ன ”அப்படி ஒரு வேலை” சம்பாதிப்பதே வாழ்வதற்கு தானே… இது போன்ற மோசமான வேலை கலாச்சாரத்தை எதிர்த்தும் பேசி வருகின்றனர். கிட்டத்தட்ட 62 ஆயிரம் நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.