வயிற்றுப் பையில் வளரும் குட்டி கங்காரு... இதுவரை அறிந்திடாத ரகசியத்தின் வீடியோ!

Viral Trending Video : கங்காருகள் பிறக்கும் போது அவைகளுக்கு காது கேட்காது. கண்கள் தெரியாது. முடிகள் இருக்காது.

நாம் பார்க்கின்ற ஒவ்வொரு விலங்குகளும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமானது தான். ஆனால் வயிற்றில் பை, அதற்குள் குட்டி விலங்கு, அதோடு துல்லித் துல்லி ஓடு கங்காருகள் மிகவும் அழகானவை. வித்தியாசத்துடன், அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் இருக்கும்.

கங்காருக்குட்டிகள் எப்படி பிறக்கின்றது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும் என்று நம்புகின்றோம். இந்த வீடியோவை பார்க்கும் வரையில் எங்களுக்கும் இது குறித்து ஒன்றும் தெரிந்திருக்கவில்லை தான்.

தாய் கங்காரு வெறும் முப்பது நாட்களிலேயே தன்னுடைய குட்டியை பெற்றுவிடுகிறது. ஆனால் அதனுடைய வயிற்றில் இருக்கும் பையில் தான் குட்டி கங்காரு வளர்ந்து கொண்டு இருக்கும். ஆறேழு மாதங்கள் வரை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் கங்காரு குட்டி, முழுமையான வளர்ச்சியை எட்டியவுடன் தான் பூமியில் தன்னுடைய பிஞ்சு பாதங்களை வைக்கிறது.

ஒரு மாதத்தில் பிறக்கும் கங்காரு குட்டிகளுக்கு நான்கு கால்கள் எல்லாம் கிடையாது. இரண்டே கால்கள் தான். காது கேட்காது. கண்கள் தெரியாது. முடிகள் இருக்காது. ஒரு குட்டி குழந்தையாக பிறக்கும் இந்த கங்காருவின் முழுமையான வளர்ச்சியை, ஆஸ்திரேலியாவில் இருக்கும் விலங்குப் பண்ணை ஒன்றில் படம் ஆக்கியுள்ளனர். அந்த வீடியோ உங்களுக்காக இதோ!

 

View this post on Instagram

 

If you’ve ever wondered what a kangaroo’s pouch looked like, this video is for you ???? Thanks to: TikTok & IG: @animaledventures

A post shared by BuzzFeed (@buzzfeed) on

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close