New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/06/lightning-Strike-on-plane.jpg)
Viral trending video of plane hit by 3 lightning bolts at once
மொத்தம் மூன்று மின்னல்கள் ஒரே நேரத்தில் அந்த விமானத்தை நோக்கி தாக்க, அடுத்த நொடியை நினைத்தாலே பயமாக இருக்கிறது.
Viral trending video of plane hit by 3 lightning bolts at once
Viral trending video of plane hit by 3 lightning bolts at once : விமான போக்குவரத்தின் போது ஏற்படும் விபத்துகள் எப்போதுமே அச்சம் தருபவையாகவே இருக்கிறது. அதுவும் மிகவும் மோசமான வானிலையின் போது விமான பயணம் என்றால் அய்யோ கடவுளே என்று தான் கூற வேண்டும் அவ்வளவு அச்சத்தை தரக்கூட ஒன்று இது.
மத்திய லண்டன் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் லண்டனின் ஹீத்ரோ ஏர்போர்ட்டை நோக்கி விமானம் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் மோசமான வானிலை காரணமாக இடியும், மின்னலும், மேகம் சூழ்ந்த வானிலையும் ஒரு சேர சூழ பத்திரமாக அந்த விமானம் தரையிறங்க வேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க : சத்தியமா இந்த பைலட் ஜகஜால கில்லாடி தான்; நடுக்காட்டில் செம்ம லேண்டிங்!
அந்த நேரத்தில் வந்தது பாருங்களே மின்னல்.. அய்யோ! ஒன்றில்லை, இரண்டில்லை மொத்தம் மூன்றும் மின்னல்கள் வெவ்வேறு திசையில் இருந்து அந்த விமானத்தை நோக்கி பாய்கிறது. நல்ல வேலையாக அந்த விமானத்திற்கும் அந்த விமானத்தில் பயணித்த யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
7வது மாடியில் அமர்ந்து இந்த வீடியோவை எடுத்தவர் ”அய்யோ கடவுளே இந்த மின்னல் யாரையோ தாக்கிவிட்டது. அது யாரையும் காயம் செய்திருக்க கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன் என்று அவர் கூறியதும் “ அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.