Viral trending video Orphaned bear reunites with caretaker : தனித்துவிடப்பட்ட குட்டிக் கரடி ஒன்றை வெகுகாலம் வளர்த்து வந்துள்ளார் ஜோனத்தன் என்பவர். சிறிது காலமாக அவரைக் காணாத அவருடைய செல்ல கரடிக்குட்டி சோன்யா அவரை மீண்டும் கண்ட போது எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Viral trending video Orphaned bear reunites with caretaker
மனிதர்கள் மற்ற மனிதர்களிடம் காட்டும் அன்பைக்காட்டிலும் நூறு மடங்கு அன்பினை கொட்டும் விலங்குகள் தான் எவ்வளவு மேன்மைமிக்கவை என்பதை விளக்குகிறது இந்த வீடியோ. ஜோனத்தனின் குரலைக் கேட்ட கரடி சோன்யா, வேலியை தாண்டி ஓடி வந்து ஜோனத்தனிடம் ஒட்டிக் கொண்டது. அவர்கள் இருவரும் சேர்ந்து மகிழ்ந்து விளையாடிவரும் காட்சி அனைவரையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
To read this article in English
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ நெட்டிசன்கள் உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான அன்பு பிரிக்க இயலாத ஆனால் ஆழமான உணர்வுப்பூர்வமான ஒன்று என அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.