/tamil-ie/media/media_files/uploads/2019/08/Leopard-final.jpg)
west bengal leopard attack, புகைப்படம் எடுத்தவரை தாக்கிய சிறுத்தை, மேற்குவங்கத்தில் சிறுத்தை தாக்குதல், Alipurduar leopard attack viral video, Alipurduar man attacked by leopard, west bengal news, kolkata city news
மேற்கு வங்க மாநிலத்தில் காயமடைந்து படுத்து கிடந்த சிறுத்தையை படம் பிடித்த நபரை அந்த சிறுத்தை வெகுண்டெழுந்து தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கே இருந்தவர்களால் எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
west bengal leopard attack, புகைப்படம் எடுத்தவரை தாக்கிய சிறுத்தை, மேற்குவங்கத்தில் சிறுத்தை தாக்குதல், Alipurduar leopard attack viral video, Alipurduar man attacked by leopard, west bengal news, kolkata city news
Viral Video a leopard attacking a man who took photos: மேற்குவங்க மாநிலத்தில் காயமடைந்து படுத்து கிடந்த சிறுத்தையை படம் பிடித்த நபரை அந்த சிறுத்தை வெகுண்டெழுந்து பாய்ந்து தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கே இருந்தவர்களால் எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், அலிபுர்தார் மாவட்டத்தில் சிறுத்தை ஒன்று சாலையோரம் படுகாயம் அடைந்து படுத்து கிடந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் சிறுத்தையின் அருகே சென்று பார்த்தனர். அருகே சென்றவர்களில் சிலர் பார்த்ததோடு மட்டுமில்லாமல், தங்களுடைய செல்போனில் போட்டோவும் எடுத்தனர்.
#WATCH West Bengal: An injured leopard attacked a man who was clicking its pictures in Alipurduar. The man sustained minor injuries, leopard has been taken for treatment and will be released in the wild after it recovers. pic.twitter.com/Jok8UFNrWw
— ANI (@ANI) August 19, 2019
அப்போது ஒரு நபர் சிறுத்தைக்கு மிக அருகில் சென்று தனது செல்போனில் போட்டோ எடுத்தார். அதுவரை படுத்து கிடந்த சிறுத்தை திடீரென வெகுண்டெழுந்து போட்டோ எடுத்த நபரை துரத்தி தாக்கியது. இதை சிறிதும் எதிர்பார்க்காத அந்த நபரும் அங்கிருந்த கூட்டத்தினரும் தலை தெறிக்க ஓடினர். அந்த நேரத்தில் அங்கே எதிர் திசையில் இருந்த ஒருவர் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்று உலகப் புகைப்படக் கலைஞர் தினத்தில் காயம் பட்ட சிறுத்தை ஏதும் செய்யாது என்று அருகே சென்று போட்டோ எடுத்த நபரை அந்த சிறுத்தை தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.