இந்த வீடியோ வைரலாக காரணம் வேண்டுமா என்ன? பாகிஸ்தான் வெற்றியை ரோட்டில் ஆடி பாடி கொண்டாடிய இந்திய ரசிகர்!

இந்தியா -பாகிஸ்தான் எதிரிகள் போல் ஒரு பிம்பம் ரசிகர்கள் மத்தியில்

இந்தியா -பாகிஸ்தான் எதிரிகள் போல் ஒரு பிம்பம் ரசிகர்கள் மத்தியில்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
world cup Indian fan viral video

world cup Indian fan viral video

world cup Indian fan viral video: பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை பாகிஸ்தான் ரசிகருடன் சேர்ந்து இந்திய ரசிகர் ரோட்டில் ஆடி பாடி கொண்டாடிய வீடியோ இணையத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் இப்போது உலகக் கோப்பை பக்கம் தான். கோலி தலைமையில் களம் இறங்கியுள்ள இந்திய அணியின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதுவரை நடந்த ஒரு போட்டியில் கூட இந்திய அணியின் தோல்வி பெறாமல் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பது இந்திய ரசிகர்களுக்கு கூடுதல் எனர்ஜியாக இருக்கிறது.

2 வாரத்திற்கு முன்பு பாகிஸ்தான் அணியும், இந்திய அணியும் மோதிக் கொண்ட ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது. பாகிஸ்தான் ரசிகர்களே அணியை கேலி கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்டிருந்தனர். இதன் உட்சபட்சமாக கேப்டன் சர்பராஸ் அஹமதை பொது இடத்தில் ரசிகர் ஒருவர் கேலி செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்திருந்தது.

இந்த அனைத்து விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விததத்தில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தங்களது அணியின் பலத்தை உறுதிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காத நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி தோற்கடித்து ரசிகர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

Advertisment
Advertisements

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை பாகிஸ்தான் தக்கவைத்து உள்ளது.இந்த வெற்றியை பர்மிங்காமில் உள்ள மைதானத்திற்கு வெளியில் இருக்கும் ரோட்டில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ஆடி பாடிக் கொண்டாடினார். அவரின் கொண்டாட்டத்தில் இந்தியன் ஜெர்சி அணிந்திருந்த இந்திய ரசிகரும் கலந்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து உறசாகமாக நடனம் ஆடினர்.

இந்த வீடியோ உடனடியாக இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. இந்தியா -பாகிஸ்தான் எதிரிகள் போல் ஒரு பிம்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்திய ரசிகர் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய சம்பவம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: