வேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்... யாருனு கண்டுபிடிங்க?

ஜிடி தேவகவுடா கர்நாடக மாநிலத்தில். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சித்தராம்மைய்யாவுடன் அரசியல் ரீதியாக நெருங்கிய சிநேகிதம் கொண்டவர். ஆரம்ப காலத்தில் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

பின்னர் அங்கிருந்து பாஜகவில் இணைந்தார். இறுதியாக மதசார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தார். சாமுண்டீஸ்வரி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராம்மைய்யாவிற்கு எதிராக மஜத சார்பாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் தசரா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா பாண்டிகையை ஒட்டி நடக்கும் மாரத்தான் போட்டி மிகவும் பிரபலமானது. சிறியவர்கள், முதியவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக இந்த மாரத்தான் போட்டி நடக்கும்.

மாரத்தான் ஓட்டத்தில் தேவகவுடா :

இந்நிலையில் மாரத்தான் போட்டியில் ஜிடி. தேவ கவுடா கலந்து கொண்டார். 65 நிரம்பிய இவர் அந்த மாரத்தான் போட்டியில் எல்லோருடனும் சேர்ந்து ஓடினார். இந்த வயதிலும் இவர் இவ்வாறு ஓடுவது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஆனால், அவர் திடிரென தடுக்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கிவிட. மீண்டும் ஓடத்துவங்கி விட்டார். இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close