டாக்டர் சார் என்னது இது! உயிரை காப்பாத்த சொன்னா இப்படி உயிரை கொடுத்து அடிக்கிறீங்க!

பிறப்பு, இறப்பு இரண்டையும் பார்க்கும் மருத்துவ சேவை

பிறப்பு, இறப்பு இரண்டையும் பார்க்கும் மருத்துவ சேவை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
viral video

viral video

viral video : ராஜஸ்தானில் சிகிச்சை பெற வந்த நோயாளியை மருத்துவர் ஒருவர் சரமாரியாக அடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

நோயாளிகளை கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை பார்ப்பவர்கள், ஒரு உயிரை காப்பாற்றும் வாய்ப்பு கடவுளுக்கு அடுத்தப்படியாக மருத்துவர்களுக்கே கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயம்.பிறப்பு, இறப்பு இரண்டையும் பார்க்கும் மருத்துவ சேவை எப்போதுமே போற்றுதலுக்கு உரியது தான்.

ஆனால் சில மருத்துவர்கள் அந்த கடமையை உணர்ந்து சரியாக செயல்படுகிறார்களா? என்றால் அது கேள்விக்குறி தான். ஒட்டு மொத்த எல்லா மருத்துவர்களையும் அந்த லிஸ்டில் சேர்த்து விட முடியாது. ஆனால் இதுப்போன்ற சில மருத்துவர்களால் மருத்துவ துறைக்கே அவப்பெயர் வந்து விடுகிறது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நோயாளி ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார். நோயாளியைத் தள்ளிவிட்டு மருத்துவமனை கட்டில் மீது ஏறி அந்த மருத்துவர் அவரைத் தொடர்ந்து அடிக்கிருக்கிறார். மற்ற நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் அதைப் பார்த்துக் கொண்டே சுற்றி வேடிக்கை பார்த்துள்ளனர்.

Advertisment
Advertisements

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் நடந்த போது மருத்துவமனையில் இருந்த நபர் ஒருவர் செல்போன் மூலம் இந்த காட்சிகளை படபிடித்துள்ளார்.

இதுபற்றி முறையாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது. அந்த வீடியோ தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மா தெரிவித்துள்ளார்.

Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: