New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/05/template-21-1.jpg)
dog, food, apologise, viral, video, நாய், உணவு, மன்னிப்பு, வைரல், வீடியோ
சக நாயின் உணவையும் சேர்த்து தின்றுவிட்டதால், பசியோடு இருக்கும் அந்த நாயிடம் சென்று மன்னிப்பு கேட்கும் நாயின் வீடியோ, மனதை உருக்குவதாக உள்ளது.
dog, food, apologise, viral, video, நாய், உணவு, மன்னிப்பு, வைரல், வீடியோ
சக நாயின் உணவையும் சேர்த்து தின்றுவிட்டதால், பசியோடு இருக்கும் அந்த நாயிடம் சென்று மன்னிப்பு கேட்கும் நாயின் வீடியோ, பார்ப்பவர்களின் மனதை உருக்குவதாக உள்ளது.
ஆறறிவு படைத்த மக்களே, மற்றவர்களுடன் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் சண்டையிட்டு கொள்கிறோம். பேசாமல், பார்க்காமல் கூட இருக்கிறோம். ஆனால், மன்னிப்பு கேட்க மட்டும் சிலநேரம் மறந்தும், மறுத்தும் விடுகிறோம்.
ஐந்தறிவு கொண்ட இந்த நாயின் செயலை பாருங்கள். வால்டர் மற்றும் கிகோ சகோதர நாய்கள். இருவருக்கும் நாயின் உரிமையாளர் உணவு வழங்கியிருந்தார். வால்டர் நாய், கிகோவின் உணவையும் சேர்த்து தின்றுவிட்டது. கிகோ நாய், கோபம் கொள்ளாது சோர்வாக படுத்திருந்தது. இதை அறிந்துகொண்ட நாய்களின் உரிமையாளர், வால்டர் நாயிடம் கடிந்துகொண்டார். வால்டர் நாய் தலைகவிழ்த்து குற்றத்தை ஒப்புக்கொண்டது. போ... உன் சகோதரன் பசியாக இருக்கிறான். அவனிடம் சென்று மன்னிப்பு கேள் என்று உரிமையாளர் கட்டளையிட்டதும், கிகோவிற்கு அருகே சென்ற வால்டர். அதை பின்னாலிருந்து கட்டிப்பிடித்து அதன் தலையின் மீது தன் முகத்தை வைத்து மன்னிப்பு கேட்டது.
நாய் மன்னிப்பு கேட்கும் வீடியோ
View this post on InstagramA post shared by ᴡᴀᴛsᴏɴ ᴀɴᴅ ᴋɪᴋᴏ (@wat.ki) on
நாயின் உரிமையாளர், இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள்இந்த வீடியோவை, சமூகவலைதளங்களில் வைரலாக்கிவருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.