New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/z1876.jpg)
viral video dog digging her puppies out of debris leaves netizens emotional - கண்கள் ஓரம் நீர் கசிய வைக்கும் வீடியோ: குட்டிகளை காப்பாற்ற கடைசி வரை போராடிய நாய்
புதையுண்ட தனது குட்டிகளை மீட்க கடைசி வரை போராடிய தாயின் பாசப் போராட்டத்தைக் கண்டு நெகிழும் நெட்டிசன்கள், மறுபக்கம் மீட்புக் குழுவையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்
viral video dog digging her puppies out of debris leaves netizens emotional - கண்கள் ஓரம் நீர் கசிய வைக்கும் வீடியோ: குட்டிகளை காப்பாற்ற கடைசி வரை போராடிய நாய்
தாய் நாயின் அலறலைக் கேட்டு, இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய நாய்க்குட்டிகளை தோண்டி எடுக்கும் வீடியோ நெட்டிசன்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.
இந்த கிளிப் 16 லட்சம் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் விலங்கு மீட்பு அமைப்பு மூலம் இந்த வீடியோ யூடியூபில் பகிரப்பட்டது.
4.35 நிமிட அந்த வீடியோவில், இடிபாடுகளில் சிக்கிய தனது குட்டிகளை மீட்க, நாய் அலறுகிறது. இந்த தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து, அங்கு விரைந்த மீட்புக் குழு நபர், அந்த இடத்திலிருந்து கல் மற்றும் இடிபாடுகளை அகற்றுகிறார். இந்த வைரல் வீடியோப்படி, நாய்க்குட்டிகள் உயிருடன் இருக்கிறதா இல்லையா என்று மீட்புக் குழுவுக்குத் தெரியவில்லை என்றாலும், நாய் மண்ணுக்கு அடியில் தனது குட்டிகள் புதையுண்ட பகுதியை துல்லியமாக காட்டி, தோண்டச் சொல்கிறது. நாயின் இந்த உறுதியான சமிக்ஞ்சையால் மீட்புக் குழு நபர் தொடர்ந்து தோண்ட, உள்ளிருந்து 2 குட்டிகள் உயிரோடு வெளியே எடுக்கப்பட்டது.
அனைத்து நாய்க்குட்டிகளும் இறுதியில் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
புதையுண்ட தனது குட்டிகளை மீட்க கடைசி வரை போராடிய தாயின் பாசப் போராட்டத்தைக் கண்டு நெகிழும் நெட்டிசன்கள், மறுபக்கம் மீட்புக் குழுவையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.