duck, fish fedding, pond, food, video, viral, social networks, facebook, twitter
வாத்து ஒன்று தனக்கு வைக்கப்பட்டுள்ள உணவை, அருகில் உள்ள மீன்களுக்கு ஊட்டி விடும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Advertisment
விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…
பிரேசில் நாட்டைச்சேர்ந்த மீனவரான டியாஸ் இ நோய்ட்ஸ் டி பெஸ்கா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். நீர்நிலையின் மேல் அமைக்கப்பட்டுள்ள தட்டில், வாத்துக்களுக்கான உணவு வைக்கப்பட்டுள்ளது. அந்த நீர்நிலையில் அதிகளவில் மீன்கள் உள்ளன. ஒரு வாத்து, தனக்கு வைக்கப்பட்டுள்ள உணவை எடுத்து மீன்களுக்கு ஊட்டி விடுகிறது.
இந்த வீடியோ எப்போது எடுத்தது யாரால் எடுத்தது உள்ளிட்ட விபரங்கள் இல்லை. அட்டகாசமான இந்த வீடியோவை இதுவரை 12 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோ தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
It’s actually trying to bait the small fish and make a meal of it...