Advertisment

என்ன மனுஷன்யா... கைலி, பனியனுடன் மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர்: வைரல் வீடியோ

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை இறக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
viral video Former Puducherry Minister R Kamalakannan lifting budle Tamil News

கைலி, பனியனுடன் நெல் மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலகண்ணன்: வைரலாகும் வீடியோ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Former Puducherry Minister R Kamalakannan | Viral Video: புதுச்சேரி மாநில வேளாண் துறை அமைச்சராக இருந்தவர் கமலக்கண்ணன். இவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் விளை நிலங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் தனது வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை அம்பகரத்தூர் பகுதியில் உள்ள தனியார் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளார்.

 

அப்போது, நெல் மூட்டை இறக்குவதற்கு பணியாளர்கள் குறைவாக இருந்ததால், தான் கொண்டு வந்திருந்த நெல் மூட்டைகளை தானே முன்வந்து டிராக்டரில் இருந்து இறக்கி வைத்தார். அவர் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை இறக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisment

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Puducherry Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment