தோனி பொண்ணுன்னா சும்மாவா? பள்ளி முடிந்து வந்தவுடன் தந்தைக்கு உதவி செய்யும் ஜிவா வீடியோ

சோஷியல் மீடியாவில் கடுமையாக போட்டி கொடுப்பவர் ஜிவா தான்

சோஷியல் மீடியாவில் கடுமையாக போட்டி கொடுப்பவர் ஜிவா தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
viral video instagram

viral video instagram

viral video instagram : தோனியின் மகள் ஜிவாவுக்கு சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பல நேரங்களில் தோனியின் வீடியோவை விட ஜிவாவின் க்யூட் வீடியோக்கள் தான் இணையத்தில் அதிக லைக்ஸ்களை பெற்று உள்ளனர்.

Advertisment

தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதை விட ஜிவா தோனிக்கும், கிராஸியாவுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். சோஷியல் மீடியாவில் இவர்களுக்கு தனியாக ஃபேன்ஸ் பேட்ச் கூட இருக்கிறது. கிராஸியா யார் என்று கேட்கிறீர்களா? அட நம்ம ரெய்னா பொண்ணு தான்ப்பா. தந்தைகளை போலவே இவங்க ரெண்டும் பேரும் திக் ஃபர்ண்ட்ஸ்.

ஜிவா தோனி பற்றி கேட்கவே வேண்டாம். ஜிவா பாடுவது, ஆடுவது, சமைப்பது, மொறைப்பது, அழுவது, பேசுவது என என்ன செய்தாலும் அவ்வளவு க்யூட்டாக இருக்கும். உடனே, ரசிகர்கள் அதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி விடுவார்கள்.

தனது தந்தைக்கு சோஷியல் மீடியாவில் கடுமையாக போட்டி கொடுப்பவர் ஜிவா தான். இந்நிலையில் தற்போது ஜிவாவின் மற்றொரு வீடியோ ஒன்று லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ளது.

Advertisment
Advertisements

தற்போது ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட டோனி ராணுவ வகை கார் ஒன்றினை வாங்கி அதிலேயே ராஞ்சி நகரை வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பள்ளி சென்று கொண்டிருக்கும் ஜிவா வீட்டிற்குத் திரும்பியதும் தோனியுடன் இணைந்து அவரது இராணுவ காரை சுத்தம் செய்ய உதவியுள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்த தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தோனி இந்த வீடியோவினை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே லைக்ஸ்கள் குவிந்தன. மேலும் பலரும் இதற்கு கமெண்ட்டுகளை தெரிவித்து ”உங்களைப் போல தான் உங்களது மகளும் மிகவும் சிம்பிளாக உதவும் எண்ணத்தோடு இருக்கிறாள்” என்று தெரிவித்து வருகின்றனர். பள்ளி விட்டு வந்தவுடன் எனக்கு உதவும் செல்ல மகள் என்று தோனி கேப்ஷனையும் குறிப்பிட்டுள்ளார்.

Social Media Viral Mahendra Singh Dhoni Ziva

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: