New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/Kangaroo-horz.jpg)
Viral video Kangaroo leaps back into lake
புர்லே ஏரி பாதுகாப்பற்றது. சுற்றிலும் செயற்கை தடுப்புகள் இருக்கின்றன என நெட்டிசன்கள் வருத்தம்
Viral video Kangaroo leaps back into lake
Viral video Kangaroo leaps back into lake after being rescued : ஆஸ்திரேலியாவின் கேன்பெர்ராவில் அமைந்திருக்கும் புர்லே-கிராஃபின் ஏரியில் ஒரு கங்காரு தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனை பார்த்த இரண்டு காவல்துறையினர் அதனை உடனே மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கரைக்கு கொண்டு வரும் நேரம் பார்த்து, யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் தண்ணீருக்குள்ளே குதித்து நீந்த துவங்கிவிட்டது கங்காரு.
இந்த 25 நொடி வீடியோ சமூக வலைதளங்களில் வரைலாக பரவி வருகிறது. ஜெட்ஸ்கை உதவியுடன் மீண்டும் அந்த ஏரிக்குள் சென்ற அந்த இரண்டு காவல்துறையினர் பத்திரமாக அந்த கங்காருவை மீட்டனர். அருகில் இருக்கும் புஷ்லேண்ட் பகுதியில் உள்ள விலங்கு நல அமைப்பினரிடம் பத்திரமாக தற்போது கங்காரு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
Jetski police in Canberra attempt to arrest swimming suspect
from r/australia
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் பல விதமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ஒரு வேளை அந்த கங்காரு ஏரியின் அக்கரைக்கு செல்ல முயற்சி செய்திருக்கும் என்றும், கங்காருகள் சிறப்பாக நீச்சல் அடிக்க தெரிந்தவை என்றும் புர்லே பாதுகாப்பற்ற ஒரு ஏரி என்றும் கருத்து கூறி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.