New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/7853088-3x2-700x467.jpg)
Viral Video Lyrebird mimicking noises goes viral
கேமரா ஷட்டர், கார் அலாரம், லேசர்வ் அலார்ம் என எதையுமே விட்டுவைக்காமல் அனைத்தையும் அவ்வளவு அழகாக திருப்பி ஒலிக்கிறது.
Viral Video Lyrebird mimicking noises goes viral
Viral Video Lyrebird mimicking noises goes viral : சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை என்று தான் கேள்வி பட்டிருப்போம். நாம் கூறியதை நமக்கே திருப்பிக் கூறும் திறன் கொண்டது கிளி மட்டுமே என்று நம்பியிருப்போம். ஆனால் தான் வாழும் சூழலுக்கு ஏற்றார் போல், தான் காதில் வாங்கும் ஒலியனைத்தையும் திருப்பி ஒலிக்கும் ஒரு பறவையினம் உள்ளது., தமிழில் யாழ்பறவை என்று அழைக்கப்படும் லைர் பறவையின் ஆற்றலை இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
This Lyrebird video via @abcadelaide starts off pretty amazing and gets extremely intense in the third act https://t.co/IVQEE3PBS2 pic.twitter.com/D0LFt8Efvn
— Ketan Joshi (@KetanJ0) October 4, 2019
இப்படி பலகுரல் மன்னனாக திகழும் இந்த யாழ்பறவையின் வீடியோ ஆஸ்திரேலியாவில் இருக்கும் அடிலைய்டு உயிரியில் பூங்காவில் எடுக்கப்பட்டுள்ளது. கேமரா ஷட்டர், கார் அலாரம், லேசர்வ் அலார்ம் என எதையுமே விட்டுவைக்காமல் அனைத்தையும் அவ்வளவு அழகாக திருப்பி ஒலிக்கிறது. மனிதக் குரல் எழுப்பும் ஓசை கேட்டு அதையும் அதே வேகத்தில் திருப்பி ஒலிக்கிறது இந்த பறவை.
இதன் குரல் வளையில் சைரின்க்ஸ் என்ற ஒரு உறுப்பு அமைந்துள்ளது. அந்த உறுப்பின் உதவியுடன் தான் இது போன்ற பலகுரல்களையும் அது நமக்கு மிமிக் செய்து வேடிக்கை காட்டுகிறது. இந்த வீடியோவை கேதன் ஜோஷி என்பவர் தன்னுடைய ட்விட்டரில் இதை பதிவிட சமூக வலைதளங்களில் இது வைரலாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.