கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம். நமக்கும் நம்மை சுற்றி உள்ளோர்க்கும், நம்பி உள்ளோர்க்கும் நாம் செய்ய வேண்டிய நல்லது என்னவென்றால் எந்த ஒரு தொற்றையும் வீட்டுக்குள் கூட்டி வராமல் இருப்பது தான். முகக்கவசம் அணிய சொல்வதும், கைகளை அடிக்கடி கழுவ கூறுவதும் நாம் நலமுடன் இருப்பதற்கு தான். பலரும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மதித்து நடப்பதில்லை. முக்கவசங்கள் அணிந்து பொது இடங்களுக்கும் செல்வதில்லை. இது தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
போர்ட்டரிக்கோ நாட்டிற்கு அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் பயணித்த நபர் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை. விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் இரண்டு முறை கூற முயன்றனர். அதனை கேட்காத இந்த பயணி விமான நிலைய அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட நபரை பிறகு விமான நிலைய அதிகாரிகள் ஒன்றாக சேர்ந்து பிடித்து கைது செய்தனர். போர்ட்டரிக்கோ நாட்டிற்கு வரும் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், முகக்கவசம் கட்டாயம் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil