தமிழ்நாட்டில் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ், 7 வயதில் ஏ.ஆர்.ரகுமானுக்கு பாடிய பாடல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் தற்போதுள்ள பிரபலமான திரைத்துறை இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் உறவினர் ஆவார். சிறிய வயதில் இருந்தே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் பிரகாஷ்.
இசையின் மேல் கொண்ட ஆர்வத்தினால், ஜிவி பிரகாஷ் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை 7 வயதில் ரகுமான் அளித்தார். “சிக்கு புக்கு ரயிலே” முதல் “குச்சி குச்சி ராக்கம்மா” வரை ஒரு சில பிரபலமான பாடல்களில் பாடியுள்ளார். சில வருடங்களுக்கு பின்னர் திரைத்துறையில் அவர் இசையமைப்பாளராக உருவெடுத்தார்.
ஜிவி பிரகாஷ் 7 வயது இருக்கையில் பாடல் நிகழ்ச்சி ஒன்றுக்காக இவர் பாடிய சிக்கு புக்கு ரயிலே பாடலை பாடிக்காட்டினார்.
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதை பார்த்து, பகிர்ந்து வருகின்றனர்.