Viral Video News in Tamil: குஞ்சு வாத்துகளுக்கு தண்ணீரில் எப்படி ஒளிந்து கொள்ள வேண்டும் என தாய் வாத்து கற்றுக்கொடுக்கும் வீடியோ வைரலாகிறது.
நாம் நம்முடைய குழந்தைப் பருவத்தில் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடியிருப்போம். ஆனால், இந்த விளையாட்டை எந்த வாத்தும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நம்மைப் போலவே கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது இந்த தாய் வாத்து. மேலும், எதிரிகள் தாக்க வரும்போது தண்ணீர் மூழ்கி எப்படி தப்பிக்க வேண்டும் என தனது குஞ்சுகளுக்கு கற்றுக்கொடுத்தும் உள்ளது
இந்த வீடியோ தற்போது இணைய வாசிகளால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் மற்றும் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வாத்துகள் தண்ணீரில் நீந்திக் கொண்டே ‘தாயிடம்’ செல்வதை நாம் பார்க்கலாம். பிறகு அங்கு சென்றவுடன் அந்த தாய் வாத்து தண்ணீரில் மூழ்குவதையும் காணலாம். இப்படி மீண்டும் மூழ்கி அந்த குஞ்சுகளுக்கு எப்படி ஒளிந்து கொள்வது என கற்றுக்கொடுக்கிறது.
Mother duck playing with & teaching her little ducklingspic.twitter.com/yMA9cqdfdQ#followme #animals
— AlexCam (@followalexcam) July 3, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“