Viral Video News in Tamil: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ளது ஜலகண்டாபுரம். இங்குள்ள மார்க்கெட்டில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் புதிய கொடி கம்பம் கடந்த மாதத்தில் நடப்பட்டது.
இந்த கொடி கம்பம் உரிய அனுமதி பெறாமல் நடப்பட்டதாக கூறப்படும் நிலையில், கொடி கம்பத்தை அகற்ற ஜலகண்டாபுரம் பேரூராட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டது. அதன்படி பாஜகவின் கொடிக்கம்பமும் அகற்றப்பட்டது.
இந்நிலையில், கொடி கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து ஏராளமான பாஜகவினர் ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சுதிர் முருகன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி தங்களது கட்சியின் கொடி கம்பத்தை மீண்டும் நாட்டினார்கள். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார், பாஜகவினர் அமைத்த கொடி கம்பத்தை அகற்றினார்கள். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் மோதலாக மாறி, இரு தரப்புக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. எனவே அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்ரீ அபினவ், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவின் நிர்வாகியை தரதரவென இழுத்துச் சென்று அதிரடியாக கைது செய்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம் எஸ்.பி ஸ்ரீ அபினவ் பாஜக மாவட்ட நிர்வாகிகளை தரதரவென இழுத்து சென்று கைது செய்யும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அவரின் செயலுக்கு பாஜகவினரும், அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், சிலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். மேலும் சிலர் சிங்கம் சூர்யா போல் கைது செய்து பாடம் புகட்டியுள்ளார் சேலம் எஸ்.பி ஸ்ரீ அபினவ் என்று கூறி அவரை புகழ்ந்து வருகின்றனர்.
BJP atrocities 👇
Perfect handling @tnpoliceoffl 🔥
Happy to appreciate Salem SP and Team 🔥#MKStalinGovernment #DMK pic.twitter.com/LjFTYVnV6G— Saimanraj❤ (@Saimanrajs) January 4, 2022
தமிழ் நாடு காவல் துறையில் இப்படியும் சிலர்..
நம்பிக்கை துளிர் விடுகிறது..
இது தொடர்ந்தால் நாடு நலம் பெறும்..
நன்றியும் வாழ்த்துக்களும் @tnpoliceoffl https://t.co/nXN3kFBZZF— தஞ்சைத் தமிழன்-பெரியாரின் பேரன் (@Gunasek36423868) January 4, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.