Viral Video News In Tamil:உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு பாடலுக்கு பெண்ணுடன் சேர்ந்து எருமை மாடு ஒன்று நடனமாடி உள்ளது. இந்த வீடியோ இணைத்தில் வைரலாகி வருகின்றது.
பெண் ஒருவர் எருமை மாட்டிற்கு முன்னால் நின்று கொண்டு நடனம் ஆடுகின்றார். அதை பார்த்த எருமை மாடு தலையை அசைத்து குதிக்கிறது . மீண்டும் அந்த பெண் ‘தோலக் பாஜ்தா’ என்ற பாட்டு பாடுகிறார். இம்முறை எருமை மாட்டையும் தான் ஆடுவது போல ஆட சொல்கிறார். எருமை மாடு இம்முறை மிக வேகமாக குதித்து தாவுகிறது. குளிருக்காக அதன் மேல் போர்த்தப்பட்டு இருக்கும் போர்வை கீழே விழும் அளவிற்கு குதிக்கின்றது. எருமை மாட்டை சுற்றி நிற்கும் குழந்தைகள் கை தட்டி உற்சாகம் செய்கிறார்கள். இசை வரும் திசை நோக்கி சென்று மேலும் கீழும் எருமை மாடு துள்ளல் செய்கின்றது.
பெண்ணும் எருமை மாடும் நடனமாடும் இந்த வீடியோ இணைத்தில் வைரலாகி வருகின்றது. 2020-ல் வைரலான வீடியோவிலே இது சிறந்த ஃப்பன்னிஸ்ட் வீடியோ என்று இணைய வாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"