/tamil-ie/media/media_files/uploads/2022/02/us-weather-reporter-with-baby.jpg)
13-week-old baby joins US meteorologists weather update : பெண்கள் தங்களின் வாழ்வில் தடைகளாக எதையுமே கருதுவதில்லை. ஒவ்வொரு தடையையும் வெற்றிக்கு அடித்தளமாகவே மாற்றி வருகிறார்கள். கொரோனா பெருந்தொற்று போன்ற காலங்களில் வீடுகளில் இருந்து பணியாற்றி வரும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் இருப்பது ஒரு போதும் மறுப்பதற்கு இல்லை. இந்த சமயத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்கள், குழந்தையையும் கவனித்துக் கொள்ள வேண்டும் வேலையையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு பணிகளை திறம்பட சிறப்பாக செய்து வருகின்றனர். அதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது அமெரிக்காவில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் வானிலை அறிக்கை வாசிக்கும் செய்தியாளரின் சமீபத்திய செயல்.
ரெபாக்கா தன்னுடைய கர்ப்பகால விடுமுறைக்கு பிறகு மீண்டும் பணிக்கு வந்துள்ள நிலையில் தன்னுடைய வீட்டிலேயே இருக்கும் ஸ்டுடியோவில் தன்னுடைய 13 வார குழந்தை ஃபியோனாவை தூக்கி வந்து ஆச்சர்யப்படுத்தினார். விஸ்கோன்சின் பகுதி மக்களுக்கு இது ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸாகவே இருந்திருக்கும்.
Meteorologist Rebecca Schuld, of CBS Milwaukee affiliate WDJT, brought her 13-week-old daughter Fiona on-air for a sweet moment during her forecast. https://t.co/IdXfeFYVDFpic.twitter.com/w9kV6oRBWC
— CBS News (@CBSNews) February 3, 2022
என்னுடைய நிகழ்ச்சிக்கு வெகுசில நிமிடங்களே இருக்கும் போது என்னுடைய குழந்தை விழித்துக் கொண்டாள். நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் என்னை குழந்தையுடன் பார்த்துவிட்டு ஃபியோனாவும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றாளா என்று கேட்ட போது அதில் தவறு ஏதும் இல்லை என்று முடிவு செய்த ரெபாக்கா தன்னுடைய குழந்தையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பெண் தலைவர்கள் அதிகமாக இருக்கின்ற நாடுகளில், பெண்களின் அன்றாட நிகழ்வுகள் குழந்தைகளையும் உள்ளடக்கியது என்பதை வெளிப்படுத்த பெண்கள் ஒரு போதும் தயங்குவதில்லை. நியூசிலாந்து பிரதமர் தன்னுடைய குழந்தையை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்தார். அதே போன்று சமீபத்தில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய குழந்தையை நாடாளுமன்றத்திற்கு தூக்கி வந்தார். அதன் பின்னர் அவருக்கு அனுப்பப்பட்ட கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் ரெபாக்கா.
Fifers got out for a walk today with mild temps in the 40s and hopes you can too! Colder weather ahead, details at 4pm. #forecastwithfifipic.twitter.com/PZeIGm9Flq
— Rebecca Schuld (@RebeccaSchuld) February 1, 2022
பெற்றோராக பொறுப்புகள் அதிகரிக்கும் போது எல்லாருடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் வேலை பார்க்கும் போது, குழந்தைகள் அழுகின்றனர், அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இரண்டுக்கும் சமநிலையில் அவர்களின் பணி தொடர்கிறது. எனவே இதில் மறைக்க ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் நான் அவளோடு நிகழ்வில் பங்கேற்றேன் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.