New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/12/senior-man-dancing-on-ice.jpg)
நமக்கு விரும்பியதை எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அதற்கு வயது என்பது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துள்ளார் இந்த 77 வயது இளைஞர்.
Viral video of 77-year-old man with cancer dances on ice: வாழ்க்கையில் நான் நினைத்ததை செய்யும் காலத்தை கடந்துவிட்டோம் என்று எப்போதும் நினைக்க கூடாது என்று சொல்வார்கள். நமக்கு விரும்பியதை எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அதற்கு வயது என்பது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துள்ளார் இந்த 77 வயது இளைஞர்.
My father is 77 years old and has stage 4 prostate cancer. He decided to learn how to ice skate a few years ago, and just did this performance with his teacher.
— Rebekah Bastian (@rebekah_bastian) December 9, 2021
For anyone that thinks it’s too late to try something new… ❤️ pic.twitter.com/0SZ3FmbNGE
ரெபாக்கா பாஸ்தியன் என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் 77 வயதுடைய என்னுடைய தந்தை ப்ரோஸ்டேட் கேன்சரின் நான்காம் கட்டத்தில் வாழ்ந்து வருகிறார். இருப்பினும் அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ் ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ள வேண்டிய ஆசை எழுந்தது. கடந்த சில ஆண்டுகளாக அவர் ஐஸ் ஸ்கேட்டிங் கற்று வருகின்ற நிலையில் தன்னுடைய ஆசிரியருடன் இணைந்து அவர் ஐஸ் ஸ்கேட்டிங் செய்யும் காட்சிகள் என்று 2.16 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் அழகான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரெபேக்காவின் தந்தை.
இந்த வீடியோவை இதுவரை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலருக்கும் இந்த வீடியோ உத்வேகம் அளித்துள்ளது என்பதை இதில் இருந்து நம்மால் காண முடிகிறது. உங்களுக்கு ஏதேனும் இது போன்று கற்றுக் கொள்ள விருப்பம் இருந்தால் ஒரு போதும் தயங்காமல் கற்றுக் கொள்ளுங்கள். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.