வானத்தில் பறக்கு விமானம் பாலத்திற்கு கீழே பறந்து பாத்துருக்கீங்களா?

பின்பக்கம் பாலத்தின் மற்றொரு பக்கமும் நன்றாக ”செருகி” நின்றிருந்ததை பார்க்கும் போது, இந்த லேண்டிங்கை கன கச்சிதமாக செய்து காட்டிய பைலட் எங்கே என்று நமக்கே கேட்க தோன்றுகிறது.

Viral video, flight viral video

டெல்லி – கூர்கான் நெடுஞ்சாலையில், நட்டநடு ராத்திரியில் நடை பாலத்திற்கு அடியே ஒரு விமானம் நிறுத்தப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விமானத்தின் முன்பகுதி துவங்கி இறக்கைகள் இருக்கும் பகுதி வரை பாலத்தின் ஒரு பகுதியிலும், பின்பக்கம் பாலத்தின் மற்றொரு பக்கமும் நன்றாக ”செருகி” நின்றிருந்ததை பார்க்கும் போது, இந்த லேண்டிங்கை கன கச்சிதமாக செய்து காட்டிய பைலட் எங்கே என்று நமக்கே கேட்க தோன்றுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, ஏர் இந்தியா நிறுவனம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டது. இந்த விமானம் ஏற்கனவே விற்கப்பட்டு, அதன் பாகங்களை பிரித்தெடுத்து அதனை உடைக்கும் பணிக்கு செல்லப்பட்டது என்றூம் அதனை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது இப்படி சிக்கிக் கொண்டது என்றும், ரோட்டில் நிற்கும் விமானத்திற்கும் எங்களின் நிறுவனத்திற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா என்ன தான் விளக்கம் தந்தாலும் நெட்டிசன்கள் தங்களால் முடிந்த அளவிற்கு இந்த நிகழ்வை சம்பவமாக்கிவிட்டார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of air indiaa plane goes under foot overbridge near delhi airport

Next Story
குக்கரை திருமணம் செய்துகொண்ட வாலிபர்; ஒருவேளை 90ஸ் கிட்ஸா இருப்பாரோ?Man marries rice cooker, trending news, viral news,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com