காண்டாமிருகத்தை விரட்ட கம்பு சுத்தும் யானை : யெப்பா இது நல்ல கதையா இருக்கே!

ஒரு யானை தன்னுடைய பராக்கிரமசாலி தனத்தை காட்ட என்ன செய்கிறது என்று பாருங்கள். அதுவும், தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் காண்டாமிருகத்திடம்

Viral video of an Elephant threatens Rhino with tree branch: யானையை காட்டுல பாத்துருப்போம், சர்க்கஸ்ல பாத்துருப்போம், கோவில்ல பாத்திருப்போம், குட்டியோடவும்  கூட்டத்தோடையும் கூட பாத்திருப்போம் ஆனா இப்படி பாக்குறது இது தான் முதல் முறை. சிங்கம் பட டையலாக்லாம் சொல்லணும் போல தோணுது இந்த வீடியோவ பாத்தா.

யானைகள் பொதுவாகவே அறிவுக்கூர்மை கொண்ட விலங்குகள். தனக்கு ஏற்பட  இருக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே உணர்ந்து கொண்டு  அதற்கு ஏற்றார் போல், தன்னை காத்துக் கொள்ளும் திறன் கொண்டவை.  அவைகளால் படிகள் ஏற முடியும்,  மனிதர்கள் சொல்வதை செய்ய முடியும். தன்னுடைய எல்லைக்கு வரும் மனிதர்களின் எண்ணங்களை உணர்ந்து கொண்டு, அவற்றை தன் குழுவுக்கு அருகே நடமாட அனுமதிக்கு வகையில் அத்தனை அறிவுக்கூர்மை கொண்டவை இந்த யானைகள்.

மேலும் படிக்க : உறங்கும் குழந்தையை சூட்கேஸில் படுக்க வைத்து இழுத்துச் செல்லும் தாய் (வீடியோ)

இங்கே ஒரு யானை தன்னுடைய பராக்கிரமசாலி தனத்தை காட்ட என்ன செய்கிறது என்று பாருங்கள். அதுவும், தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் காண்டாமிருகத்திடம்.

சும்மா புல் மேய்ந்து கொண்டிருந்த காண்டாமிருகத்தை எரிச்சல் அடைய செய்தது மட்டுமில்லாமல் கோபத்தையும் தூண்டிவிடும் இந்த யானை, பிறகு காண்டாமிருகம் பதில் தாக்குதலுக்கு வர, கம்பு சுற்ற ஆரம்பித்து விடுகிறது. எதிர்பாராத நிகழ்வால் அதிர்ந்த காண்டாமிருகம் பின்பு அங்கிருந்து நகரத் துவங்குகிறது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் தங்களின் பல்வேறு கருத்துகளை முன் வைக்கின்றனர். எப்போதேனும் தான் யானைக்கும் காண்டாமிருகங்களுக்கும் இடையே சண்டை என்பது நடைபெறும் என்றும், அப்படியே நடந்தாலும், யானையை காட்டிலும் வலுவான காண்டாமிருகங்கள் வெல்வதற்கு தான் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகிறார்கள் அவர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“ 

தென்னாப்பிரிக்காவில் இருக்கும் க்ரூகெர் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட காட்சிகள் ஆகும். நேசனல் ஜியோகிராஃபி எக்ஸ்ப்ளோரர் ஜோய்ஸ் பூல் இது குறித்து கூறுமையில், ”உண்மையிலேயே யானை அந்த காண்டாமிருகத்துடன் விளையாடவே நினைத்தது. தன்னுடைய தும்பிக்கையை ஆங்கில எழுத்து ”எஸ்” வடிவில் வளைக்கும் போது அது விளையாட்டுக்கான அழைப்பு தான். ஆனால் இதை அறிந்து கொள்ளாத காண்டாமிருகமோ, தன்னை தாக்கத்தான் இந்த யானை வருகிறது என்று நினைத்து பதிலுக்கு தாக்க முற்படுகிறது” என்று கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“ 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close