வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்த காவல் அதிகாரி; வைரலாகும் வீடியோ

உணவு ஆர்டர் செய்திருப்பவர் பசியுடன் காத்திருப்பார் என்று அவருடைய வீட்டிற்கே சென்று உணவை கொடுத்துள்ளார் அந்த காவல்துறை அதிகாரி.

viral video of Arkansas police officer finishes food delivery , viral news, viral video, trending viral videos

viral video of Arkansas police officer finishes food delivery : உங்களின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. நீங்கள் திறக்கும் போது காவல்துறையினர் நின்றிருந்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? கொஞ்சம் பதட்டம் அடைந்து தான் போவோம். அர்கானாஸ் காவல்துறை அதிகாரி டெய்லர் வில்லியம்ஸ், உணவு ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்துவிட்டு போன காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

காவல்துறை அதிகாரி ஏன் சாப்பாடு டெலிவரி செய்கிறார் என்ற குழப்பம் உங்களுக்கு இருப்பதை போலத்தான் எங்களுக்கும் இருக்கிறது. என்னவென்று பார்த்தால், அருகில் உள்ள சைனீஸ் உணவகத்தில் தனக்கான உணவை ஆர்டர் செய்த அந்த பெண்ணுக்கு உணவை எடுத்து வந்துள்ளார் டெலிவரி மேன். ஆனால் சாலை விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட, உணவு ஆர்டர் செய்திருப்பவர் பசியுடன் காத்திருப்பார் என்று அவருடைய வீட்டிற்கே சென்று உணவை கொடுத்துள்ளார் அந்த காவல்துறை அதிகாரி.

முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவை 2500க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். காவல்துறை அதிகாரியின் இந்த செயலை நெட்டிசன்கள் புகழ்ந்ந்து தள்ளியுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of arkansas police officer finishes food delivery after company driver is arrested

Next Story
தாய்லாந்தில் படம் வரையும் யானை; வைரலான வீடியோ… இணையத்தில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X