New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/10/cats-1.jpg)
காற்று வீசும் போது நாற்றுகள் எல்லாம் அசைந்தாட, மான் முன்னேறிச் செல்லும் காட்சி, ஹாலிவுட் படங்களில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் போல இருக்கிறது.
Viral video of Blackbuck of Rohtas : வனவிலங்குகள் தொடர்பாக எவ்வளவோ வைரல் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். சில நேரங்களில் மிகவும் நகைப்பூட்டும் வகையில், சில நேரங்களில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருக்கும். ஆனால் அதன் செய்கைகள் அனைத்தையும் அது இருக்கும் இடத்தில் வைத்து அப்செர்வ் செய்யும் போது அதன் அழகு என்னவோ தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
அட நாம் வாழும் உலகில் இத்தனை அழகான இடங்கள் எல்லாம் இருக்கிறதா, அதில் இத்தனை வகையான உயிரினங்கள் வாழ்கின்றதா என்பது வியப்போடு ஒரு வித ஆச்சர்யத்தை அளிக்கும். அந்த வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. பீகார் மாநிலம் ரோஹ்தாஸில் அமைந்திருக்கும் வயல்வெளி ஒன்றில் ப்ளாக்பக் என்ற மான் ஒன்று நின்று சுற்றி முற்றி பார்க்கும் காட்சி அத்தனை சிலிர்ப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Blackbucks of Rohtas. Holding high the baton of Indian Wildlife prospering in the agricultural landscapes of Bihar.#wildlifeweek #ForesterLife@ParveenKaswan @rameshpandeyifs@UNBiodiversity pic.twitter.com/JzVCceREmP
— Pradyumn Gaurav (@Pradyumn_IFS) October 3, 2021
ப்ரதியுமன் கௌரவ் என்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் மான் ஒன்று வயல்வெளியில் நடந்து வர, காற்று வீசும் போது நாற்றுகள் எல்லாம் அசைந்தாட, மான் முன்னேறிச் செல்லும் காட்சி, ஹாலிவுட் படங்களில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் போல இருக்கிறது. இதுவரை நீங்கள் இந்த வீடியோவை பார்க்கவில்லை என்றால் தற்போது நீங்கள் பாருங்கள். ஏன் என்றால் நிச்சயமாக இந்த வீடியோ உங்களின் ஒட்டுமொத்த “மூடையும்” மாற்றிவிடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.