Viral video of cow attacking a man who disturbs a street dog : தான் செய்யும் நல்லதும் கெட்டதும் நம்மைச் சுடும். எனவே நம்முடைய செயல்களில் எப்போதும் கவனம் இருக்க வேண்டும். நல்லதை விதைத்தால் நல்லதையே அறுவடை செய்வோம். கெட்டதை விதைத்தால் கேடு தான் விளையும். அதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம். இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு நபர் நாய் ஒன்றின் காதுகளை பிடித்து தூக்கி அதனை துன்புறுத்திக் கொண்டிருக்கிறார். அந்த நாய் அவரின் பிடியில் இருந்து எப்படி தான் தப்பிக்கப் போகின்றோம் என்று தவித்துக் கொண்டிருக்கிறது. அப்போது அந்த பக்கத்தில் வந்த மாடு ஒன்று அவரை முட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை ட்விட்டரில் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil