அண்ணன் இல்லாத குறையை நீக்கிய CRPF வீரர்கள்; வீர மரணம் அடைந்தவரின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி

ஒரு அண்ணன் தன் தங்கையின் திருமணத்திற்காக என்னவெல்லாம் செய்வாரோ அதை அனைத்தையும் அவருடன் பணியாற்றிய வீரர்கள் செய்து அந்த குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

Viral video of CRPF jawans turn up at wedding of slain soldier’s sister, viral video
கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் தங்கை திருமணத்தில் பங்கேற்ற வீரர்கள்

Viral video of CRPF jawan : திருமணங்கள் என்ன தான் மகிழ்ச்சியாக நடைபெற்றாலும் சில தருணங்கள் நம்மை மிகவும் கவலை அடையவும், நெகிழ்ச்சி அடையவும் வைத்துவிடும். ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த அண்ணன் இடத்தை நிரப்ப, அவருடன் பணியாற்றிய அனைத்து ராணுவ வீரர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு தங்கையின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றி வந்த கான்ஸ்ட்பிள் சைலேந்திர ப்ரதாப் சிங் என்பவர் 05/10/2020 அன்று புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலின் போது உயிரிழந்தார். அப்போது அவருடன் பணியாற்றிய இதர வீரர்கள் அனைவரும் இந்த திருமண நிகழ்ச்சியில் தங்கள் பங்கினை சிறப்பாக செய்ததோடு மட்டுமின்றி “மூத்த அண்ணன்களாக” இருந்து அந்த பெண்ணிற்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

2008ம் ஆண்டு சி.ஆர்.பி.எஃப். வீரராக பணியில் சேர்ந்த ப்ரதாப் 110 பெடாலியனில் சேர்ந்து பணியாற்றினார். புல்வாமில் நடைபெற்ற தாக்குதலின் போது அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்குடன் பணியாற்றிய வீரர்களுக்கு உ.பியில் பணிகள் வழங்கப்பட்ட நிலையில், ப்ரதாப்பின் தங்கைக்கு திருமணம் என்று கேள்விபட்ட நிலையில் மொத்தமாக நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் தங்களின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இந்த வீரர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of crpf jawans turn up at wedding of slain soldier sister

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express