வானில் பறக்கும் செல்லப் பிராணி… வாழ்ந்தா இந்த நாய்க்குட்டி மாதிரி வாழணும் – வைரல் வீடியோ

பாராக்ளைடிங் நடைபெறும் இடத்திற்கு தினமும் அழைத்து வந்து, அங்கே நடப்பதை வேடிக்கை காட்டியுள்ளார் ஷாம்ஸ்.

viral video of cute dog paragliding

viral video of cute dog paragliding : பாராக்ளைடிங் போன்ற த்ரில்லான விளையாட்டை பலரும் மேற்கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் இங்கே ஒரு நபர் தன்னுடைய செல்ல பிராணியுடன் பாராக்ளைடிங் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

உடலை சுற்றி பாராக்ளைடிங்கிற்கான பெல்ட் கட்டப்பட்ட நிலையில், வெள்ள நிற, பஞ்சு போன்று இருக்கும் ஒரு க்யூட் நாய் தன்னுடைய உரிமையாளருடன் பாராக்ளைடிங் செய்துள்ளது.

ஃப்ரான்ஸ் நாட்டில் அமைந்திருக்கும் கோல் டு க்ரானோன் என்ற புகழ்பெற்ற மலைத்தொடர் மத்தியில் இந்த பாராகிளைடிங்கை மேற்கொண்டுள்ளனர் அட்வென்ச்சர் பட இயக்குநர் ஷாம்ஸூம் அவருடைய செல்ல நாய்க்குட்டி ஔக்காவும். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தன்னுடைய நாய்க்கு ஒரு மாதத்திற்கு முன்பு எவ்வாறு பயிற்சி அளித்தேன் என்று கூறி அந்த வீடியோவையும் அவர் வெளியிட்டிருக்கிறார். பாராக்ளைடிங் நடைபெறும் இடத்திற்கு தினமும் அழைத்து வந்து, அங்கே நடப்பதை வேடிக்கை காட்டியுள்ளார் ஷாம்ஸ்.

கடந்த ஜூன் மாதம் ஔக்காவை செல்லப்பிராணியாக அழைத்து வந்த பிறகு என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. நான் அவனுடைய வாழ்வில் சிறந்த பகுதியை தர விரும்புகிறேன். அவன் என்னை மறுபடியும் சிரிக்க வைக்கிறான். இனி உலகம் முழுவதும் பறந்து செல்வோம் என்று கூறி மேலும் சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of cute dog paragliding journey over french slopes

Next Story
கேன்சரால் உயிரிழந்த சிறுமி… கல்நெஞ்சக்கார தந்தையிடம் பணஉதவி கேட்டு கெஞ்சிய விடியோ!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com