இது செவ்வந்தியா? இல்ல, சூரிய காந்தியா? நாய்க்குட்டி வரைந்த க்யூட் ஓவியம்… வைரல் வீடியோ

நாய் படம் வரைஞ்சா கொண்டாடுறீங்க; யானை வரைஞ்சா திட்டுறீங்க… உங்கள புரிஞ்சுக்கவே முடியல நெட்டிசன்ஸ்…

viral video of dog painting flower on canvas

நாய் படம் வரைஞ்சா கொண்டாடுறீங்க; யானை வரைஞ்சா திட்டுறீங்க… உங்கள புரிஞ்சுக்கவே முடியல நெட்டிசன்ஸ்… சமீபத்தில் யானை ஒன்று தாய்லாந்து நாட்டில் வரைந்த ஓவியம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதனைத் தொடர்ந்து பலரும், யானையை கட்டாயப்படுத்தி இப்படியா படங்களை வரைய வைப்பது என்று திட்டித் தீர்த்துவிட்டார்கள்.

ஆனால் தற்போது நாய் ஒன்று படம் வரையும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பலரும் கொண்டாடி வருகின்றனர். நாயோ, யானையோ அதனை அதன் இயல்பில் விட்டுவிட்டால் தான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனை விட்டுவிட்டு ஏன் இந்த வேண்டாத வேலை என்ற கேள்வி எழாமல் ஒன்றும் இல்லை. இருப்பினும் இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் உங்களின் பார்வைக்கு.

மை ஆஸி கால் என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ ஒன்றில் சீக்ரெட் என்று அழைக்கப்படும் அந்த நாய் ஒன்று முதலில் கேன்வாஸ் முழுவதும் நீல நிற வண்ணம் அடிக்கிறது. பிறகு அதில் மஞ்சள் நிறத்தில் பூ ஒன்றை வரைந்து வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த இந்த நாய் செய்யும் பல செல்ல சேட்டைகளை இந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் கண்டு மகிழலாம். இந்த வீடியோவை கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of dog painting flower on canvas

Next Story
காரையே விழுங்கிய சாலை; இந்த வேலைய பாத்த காண்ட்ராக்டர் “நேசமணி” யாருய்யா?Sinkhole Delhi, Traffic police car, Dwaraka sector 18,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express