Advertisment

வேகமாக தாக்க வந்த சிறுத்தையை “லெஃப்டில் டீல்” செய்த பாட்டி - வைரல் வீடியோ

சிறுத்தை அடித்ததில் நிலை தடுமாறிய பாட்டி கீழே விழுந்தார். ஆனாலும் கூட கையில் இருந்த தடியை வைத்து பலமாக சிறுத்தையை தாக்க அதிர்ச்சியில் உறைந்தது சிறுத்தை.

author-image
WebDesk
New Update
leopard attack, mumbai woman, narrow escape

Leopard video : மும்பை கோரேகான் பகுதியில் வசித்து வரும் வயதான மூதாட்டி ஒருவர் காற்று வாங்க வீட்டின் பின்புறம் வந்து அமர்ந்துள்ளார். மிகவும் வயதான அந்த பாட்டி கைத்தடியுடன் வந்து அங்கே இருக்கும் திண்டில் அமர்ந்தார்.

Advertisment

அவருக்கு பின்னால் இருட்டில் மறைந்திருந்த சிறுத்தையை அவர் கவனிக்கவில்லை. அவர் வந்து அமரும் வரை பொறுமையாக காத்திருந்த அந்த சிறுத்தை மெல்ல மெல்ல முன்னோக்கி அடியெடுத்து வைத்து வந்தது. அதனை பார்த்ததும் சுதாகரித்துக் கொண்ட பாட்டி அவருடைய கைத்தடியை எடுக்கவும் சிறுத்தை அவரை தாக்கவும் சரியாக இருந்தது.

சிறுத்தை அடித்ததில் நிலை தடுமாறிய பாட்டி கீழே விழுந்தார். ஆனாலும் கூட கையில் இருந்த தடியை வைத்து பலமாக சிறுத்தையை தாக்க அதிர்ச்சியில் உறைந்தது சிறுத்தை. பிறகு அந்த தடியை வைத்து மீண்டும் அடிக்க முயற்சி செய்தார் பாட்டி. அங்கே ஏற்பட்ட கூச்சல் குழப்பங்கள் காதில் விழ அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பித்து மறைந்தது.

கிட்டத்தட்ட நிராயுதபாணியாக பாட்டி சிறுத்தையை சமாளித்த நிகழ்வு அங்கே வைத்திருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறிய காயங்களுடன் தப்பித்த பாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ.என்.ஐ. செய்தி ஏஜென்சி இன்று காலை வெளியிட்டுள்ள இந்த வீடியோவை 2 மணி நேரத்திற்குள் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment