/tamil-ie/media/media_files/uploads/2021/11/cats-7.jpg)
viral video of elephant calf : யானைகள் என்றாலே அனைவருக்கும் ஒரு குதுகலம் பிறந்துவிடும். அதுவும் அதிகாலை நேரத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டிகளுடன் ஒரு யானைக் கூட்டத்தை கண்டால் பயத்துடன் கூடிய மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது தான்.
குட்டிகளை காப்பதில் யானைகள் எப்போதும் படு உஷார். எப்போதும் அதற்கு ஆபத்து வராத வகையில் அரணாக அமைந்திருக்கும். இதன் கர்ப்பகாலம் என்பது 20 மாதங்கள் என்பதால் பிறக்கு குட்டிக்கு இத்தனை அக்கறை தேவை தான்.
நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சுப்ரியா சாஹூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த யானை வீடியோ ஒன்றில் மூன்று வளர்ந்த யானைகளும் ஒரு குட்டி யானையும் மேய்ந்து கொண்டிருக்கிறது. சிறிது நேரத்தில் என்ன யோசனை தோன்றியதோ என்னவோ குட்டியானையை நடுவில் வைத்து மற்ற மூன்று யானைகளும் அரணாய் வெகுநேரம் நிற்க துவங்கிவிட்டன.
Breakfast with family is the best,especially when an adorable kutty is around ❤️ also look at the way the Elephant family has surrounded the baby to protect her from prying eyes .. amazing #Elephants#Mudumalai#Nilgiris video - by SS pic.twitter.com/p7iUhNHl6Q
— Supriya Sahu IAS (@supriyasahuias) November 16, 2021
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் மேலே உள்ள கேப்சனில், முன்னாள் மாவட்ட ஆட்சியர், குடும்பத்தினருடன் காலை உணவு என்பது சிறந்தது. அதுவும் மிகவும் அழகான குட்டி ஒன்று உடன் இருந்தால். மற்றவர்களின் பார்வையில் இருந்து தன்னுடைய குட்டியை யானைகள் பாதுகாக்கும் விதத்தை பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.