Advertisment

நல்ல காரியம் செய்த ரயில்வே; திசை தெரியாமல் சிக்கிக் கொண்ட யானைகளுக்கு விடிவு தான் - வீடியோ

தினமும் வந்து போகும் பாதையில் திடீரென முளைத்திருக்கும் அந்த தடுப்புச்சுவரை பார்த்ததும் அந்த யானைகள் தடுமாறும் காட்சிகள் வருத்தததை ஏற்படுத்தும்

author-image
WebDesk
Feb 04, 2022 15:21 IST
New Update
Viral Video of elephants struggling to cross tracks

Viral Video of elephants struggling to cross tracks: யானைகளின் வழித்தடம் இன்று இந்தியாவில் மிகப்பெரிய, சுற்றுசூழல் பேசு பொருளாக இருக்கிறது. யானைகளின் வழித்தடங்களில் உருவாக்கப்படும் மேம்பாட்டு திட்டங்களால் யானைகளும், இதர உயிரினங்களும் தங்களின் வலசை பாதைகளை இழந்து தவித்து வருகின்றன. இந்த சூழலில் நீலகிரியில் யானைக் குடும்பம் ஒன்று தங்களின் வலசைப் பகுதியில் போடப்பட்ட ”திடீர்” தடுப்புச் சுவரால் குழப்பம் அடைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

நீலகிரி முன்னாள் மாவட்ட ஆட்சியரும், தமிழக சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் செயலாளருமான சுப்ரியா சாஹூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுவரை இந்த வீடியோவை 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இந்த ட்விட்டர் பதிவில் அவர், யானைகள் சில கூட்டமாக வருகின்றன. வந்து அங்கே இருக்கும் ரயில் தண்டவாளங்களில் ஏறி நிற்கின்றன. தினமும் வந்து போகும் பாதையில் திடீரென முளைத்திருக்கும் அந்த தடுப்புச்சுவரை பார்த்ததும் அந்த யானைகள் தடுமாறும் காட்சிகள் வருத்தததை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. பின்பு அனைத்து யானைகளும் ஏறிய பிறகு தண்டவாளத்திலேயே மேற்கொண்டு நடக்க துவங்குகின்றன.

வேதனை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது என்று தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள சுப்ரியா சாஹூ மேலும், இது போன்ற இடங்களில் உள்கட்டமைப்பு பணிகளாஇ மேற்கொள்ளும் போது எப்படி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும் என்றும், வன வாழ்வியலுக்கு அச்சுறுத்தல் தராத வகையில் அந்த கட்டுமானங்கள் இருக்க வேண்டும் என்றும் ட்வீட் செய்து இந்திய ரயில்வேதுறை அமைச்சகத்தை "டேக்" செய்திருந்தார்.

நீலகிரி மாவட்டம் ஹில்க்ரோவ் ரயில்நிலையத்தின் அருகே மேற்கொள்ளப்பட்ட இந்த கட்டுமான நடவடிக்கைகள் குறித்து சுப்ரியா சாஹூ ட்வீட் வெளியிட்ட நிலையில் சில நாட்களில் அந்த தடுப்புச் சுவரை இடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது ரயில்வே. இந்த வீடியோவையும் ட்விட்டரில் பதிவிட்டு அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்ட நபர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment