viral video of Five Sikh men use their turbans to rescue hiker : கனடாவில் அமைந்திருக்கும் கோல்டர் இயர்ஸ் நீர் வீழ்ச்சிக்கு அருகே மலையேற்றம் மேற்கொண்ட இரண்டு நபர்கள் அபாயத்தில் இருப்பதாக மீட்புக் குழுவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
Advertisment
இதனைத் தொடர்ந்து ரிட்ஜ் மீடோஸ் சர்ச் அண்ட் ரெஸ்க்யூ அணி அந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் ரிக் லாய்ங் இது குறித்து கூறிய போது. ட்ரெக்கிங் சென்ற இரண்டு நபர்களில் ஒருவர் மேலே நீர்வீழ்ச்சிக்கு கீழே இருக்கும் நீர் தேங்கிய பகுதியில் விழுந்துவிட்டார். இதனை தொடர்ந்து அங்கே ட்ரெக்கிங் சென்ற மற்றொரு குழுவினர் உடனடியாக செயலில் ஈடுபட்டு அந்த நபரை காப்பாற்றியதாக கூறியுள்ளார்.
மாப்பிள் ரிட்ஜ் நியூஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில், அங்கே சென்ற ஐந்து இளாம் சீக்கியர்கள் தங்களின் தலைப்பாகையை கழற்றி, இணைத்து பெரிய கயிறு போல் திரித்து கீழே போட்டுள்ளனர்.
Advertisment
Advertisement
மேலும் பாறையின் விளிம்பு வரை சென்று பாதுகாப்பான இடத்தில் அமர்ந்த வண்ணம் அந்த நபருக்கு அந்த தலைப்பாகை கயிறு கிடைப்பதை உறுதி செய்துள்ளார் மற்றொரு சீக்கியர்.
ஐந்து பேர் உதவியால் நான் காப்பற்றப்பட்டது என்னுடைய அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார். அந்த பாறைப்பகுதி மிகவும் சறுக்கலாக இருந்த காரணத்தால், அதில் இருந்து மேலே ஏறுவது சவாலாக இருந்தது என்று கூறியுள்ளார். இன்னும் சிறிது நேரம் அவர் அந்த நீரில் இருந்திருந்தால் ஹைப்போதெர்மியாவால் மரணம் அடைந்திருக்ககூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil