New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/truck-train.jpg)
சற்று நேரத்தில் அந்த பக்கத்தில் இருந்து மிகவும் வேகமாக வந்த சரக்கு ரயில் மோத காற்றாலை விசிறியுடன் சேர்த்து அந்த ராட்சச ட்ரக்கும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
viral video of Freight train in Texas collides : தினம் தினம் நிகழும் சாலை விபத்துகளால் பலர் உயிரிழக்கும் பரிதாபமான சூழல் ஏற்படுகிறது. எவ்வளவு தான் திறம்பட செயல்பட்டாலும் இயந்திரக் கோளாறுகள் துவங்கி, தவிர்க்க முடியாத சூழல்கள் போன்ற காரணங்களால் விபத்துகள் நடைபெறுகின்றன.
இங்கே சரக்கு ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று, காற்றாலை விசிறி ஒன்றை ஏற்றி வந்த சரக்கு லாரியுடன் மோதும் காட்சிகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளா லுலிங் பகுதியில் 18 சக்கர வாகனம் ஒன்று காற்றாலைக்கு தேவையான விசிறி ஒன்றை வைத்துக் கொண்டு தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது. மிக அதிக எடை கொண்ட அந்த விசிறியை ஏற்றி வந்த வாகனத்தை திருப்புவதில் அதிக கஷ்டத்தை உணர்ந்த ஓட்டுநர் மெல்ல மெல்ல வலது பக்கமாக அதனை திருப்ப முயன்றார். ஆனால் அதற்குள் அந்த பகுதியில் இருந்து வந்த ரயில் ஒன்று அந்த ட்ரெக்கில் மோதி, காற்றாலை விசிறி இருந்த பகுதியை பலத்த சேதத்திற்கு ஆளாக்கியது மட்டுமின்றி, ட்ரெக்கையே கீழே சாய்த்துவிட்டது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு ஒன்றை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அதனை வீடியோவாக படம் பிடிக்க, இதே நிகழ்வை வேறு ஒரு நபர் மற்றொரு கோணத்தில் படம் பிடித்துள்ளார். நல்ல வேளையாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த விதமான உயிர் சேதாரமும் ஏற்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.