New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/10/cats-13.jpg)
இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்ற அதே சூழலில் இது பல்வேறு விதமான கவலைகளையும் மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வன உயிரினங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. உலகம் வெப்பமயமாதல் மற்றும் மக்களின் செயல்முறைகளே பெரும்பாலான வனவிலங்குகளின் இன்னல்களுக்கு காரணம்.
இந்தியா முழுவதும் யானைகளின் வழித்தடத்தில், வாழிவிடத்தில் பல்வேறு மனித இடையூறுகள், குறிப்பாக ரெசார்ட்கள், வீடுகள். மேம்பாட்டு திட்டங்கள் என ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
உங்களுக்கு தெரியுமா, ஆப்பிரிக்காவில் நாளுக்கு நள் தந்தத்திற்காக வேட்டையாடப்படும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற காரணத்தால் தந்தங்களற்ற யானைகளை பிரசவிக்கும் வகையில் பெண் யானைகள் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றில் யானை ஒன்று காட்டு வழியே நடந்து வந்து அங்கே இருக்கும் தடுப்புச்சுவரில் ஏறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடந்து செல்கிறது.
இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்ற அதே சூழலில் இது பல்வேறு விதமான கவலைகளையும் மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன? வனவிலங்குகள் வாழிடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை நீக்கும் வழி என்ன? என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.