மீன் பறவைகளை வேட்டையாடுமா? அதிசயக்க வைக்கும் இயற்கை… வைரலாகும் வீடியோ

இன்ஸ்டகிராமில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டுள்ளோர் பார்வையிட்டுள்ளனர்.

Viral video of giant trevally catching seabird

Viral video of giant trevally catching seabird : பி.பி.சி. எர்த் வழங்கும் ப்ளூ ப்ளாணட் ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வீடியோ க்ளிப் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜையண்ட் ட்ரைவாலி (giant trevally) என்ற மீன் கடலுக்குள் இருந்த வண்ணம் பறவைகளை வேட்டையாடும் இயல்பு கொண்டவை.

மேலும் படிக்க : கட்டுக்கடங்காத யாஸ்; கவலை அடைய வைத்த சூறாவளி; வைரலாகும் வீடியோக்கள்

இந்த மீன்கள் இருக்கும் இடத்தில், கடலின் மேற்பரப்பில் உணவுக்காக காத்திருக்கும் எந்த பறவைகளுக்குமே பாதுகாப்பு இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். காற்றின் வேகம், உயரம் மற்றும் பறவையின் பறக்கும் திசை ஆகியவற்றை கணக்கிட்டே தாக்குதலில் ஈடுபடுமாம் இந்த வகையான வேட்டைக்கார மீன்கள். இயற்கை எண்ணற்ற அதிசயங்களை தமக்குள் மறைத்து வைத்திருப்பது உண்மை தான்.

நேற்று இன்ஸ்டகிராமில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டுள்ளோர் பார்வையிட்டுள்ளனர். இது குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of giant trevally catching seabird

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com