New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/dance_1200.jpeg)
சும்மாவே ஆடுவாரு; அவரோட திருமணம்னா சொல்லவா வேணும் என்ற ரேச்ஞ்சுக்கு ஒரு செம்ம டான்ஸ் ஆடியுள்ளார் நடன கலைஞர் குஸ்தவோ துர்சோ அலெக்ஸோ.
தங்களின் திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்த திட்டமிடும் ஜோடிகள் மறக்காமல் அதில் நடனத்தையும் இணைத்துக் கொள்வார்கள். பெரும்பாலான இந்திய திருமணங்களில் மணப் பெண்கள் மட்டுமே நடனமாடுவார்கள். ஆனால் வெளிநாட்டில் நடைபெற்ற ப்ரொஃபெஷ்னல் டான்சரின் திருமண நிகழ்வு வேறு லெவலுக்கு இருந்துள்ளது. சும்மாவே ஆடுவாரு; அவரோட திருமணம்னா சொல்லவா வேணும் என்ற ரேச்ஞ்சுக்கு ஒரு செம்ம டான்ஸ் ஆடியுள்ளார் நடன கலைஞர் குஸ்தவோ துர்சோ அலெக்ஸோ.
நான்கு வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட குஸ்தோவின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தன்னுடைய திருமணத்திற்கு சிறப்பான நடன வருகை புரிந்த மணமகனுடன், சிறிது நேரத்தில் அவருடைய நண்பர்களும் இணைந்து நேர்த்தியான நடனத்தை ஆடினார்கள்.
GROOM'S GOT MOVES!!!
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) September 19, 2021
This groom & members of the wedding party in Brazil make quite an entrance to the wedding service...Justin Timberlake check this out!🎵🕺🏽🔥(🎥:gustavodurso)
pic.twitter.com/QigYCnsjVD
குட் நியூஸ் மூவ்மெண்ட் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட கிட்டத்தட்ட 2 மில்லியன் நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். இது செம்ம ஸ்டைலாக நேரத்தியாக இருக்கிறது என்று பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். தமிழ்ப் பசங்களா, இதெல்லாம் கொஞ்சம் என்னனு பாத்து கத்து வச்சுகோங்க!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.