New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/dance_1200_twt-2.jpeg)
இதில் ஆச்சரியம் என்னவென்றால் முகக்கவசம் அணிந்து நடனமாடிய அந்த மருத்துவ பணியாளர் யார் என்பதை அறிந்து கொள்ள மக்கள் முயற்சி செய்வது தான்.
Viral video of Health worker's impromptu ballet : உட்டா பல்கலைக்கழக மருத்துவமனையில் சுகாதார பணியாளர் ஒருவர் ஆடிய பாலே நடனம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய அந்த மருத்துவமனை நிர்வாகம் “உண்மையான மகிழ்ச்சி நிறைந்த தருணம்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஒரு நிமிடம் 05 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், சீருடை அணிந்து, முகக்கவசம் அணிந்த மருத்துவப் பணியாளர் ஆட, அதன் அருகில் இருந்த பியானோ ஒன்றை மற்றொருவர் இசைக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் முகக்கவசம் அணிந்து நடனமாடிய அந்த மருத்துவ பணியாளர் யார் என்பதை அறிந்து கொள்ள மக்கள் முயற்சி செய்வது தான்.
This phlebotomist gave a beautiful impromptu masked ballet performance at the hospital ❤️ https://t.co/5UM7LbwTEu pic.twitter.com/wajIOWu85v
— Good Morning America (@GMA) September 2, 2021
இது தொடர்பாக பதில் அளித்துள்ள உட்டா பல்கலைக்கழக மருத்துவமனை, அந்த நடனக்கலைஞர் யார் என்று தெரியவில்லை. ஆனால் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களைப் போன்றே எங்களுக்கும் உள்ளது என்று கூறியுள்ளனர்.
Teva Martinson, a phlebotomist at u of u health!
— University of Utah Health (@UofUHealth) September 1, 2021
அந்த நபர் யார் என்று அறிந்து கொள்ள இருக்கும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட அனைவரும் அதனை ஷேர் செய்து கேள்விகளை எழுப்பினார்கள். பிறகு அந்த பாடலுக்கு நடனமாடிய அந்நபர் டேவா மார்டின்சன் என்றும் 1977ம் ஆண்டு வெளியான ரிச்சர்ட் க்ளேடெர்மெனனின் பாலே பௌர் அடலைன் என்ற இசைக்கு நடனமாடினார் என்றும் டெய்லி மெயிலில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.