ஒரு நாள் ஒரு லிஃப்ட்ல ஒரு சராசரி மனுசனும் சிலந்தி மனுசனும் சந்திச்சா?

சூப்பர் ஹீரோவா இருந்தாலும் ஊரடங்கு விதிகளை மதிக்க வேண்டும். இல்லையென்றால்?

சூப்பர் ஹீரோவா இருந்தாலும் ஊரடங்கு விதிகளை மதிக்க வேண்டும். இல்லையென்றால்?

author-image
WebDesk
New Update
Viral Video of hilarious interaction between man and Spider-man in an elevator

Viral Video of hilarious interaction between man and Spider-man in an elevator :  வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு என்ற நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது மேற்கு வங்க அரசு. அனைத்து மக்களும் அந்த நாட்களில் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மக்களை வழியுறுத்தி வருகின்றனர் காவல்துறையினர். கொல்கத்தா மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நகைச்சுவையான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார் கல்கத்தா துணை ஆணையர் சுதீர் குமார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது இவ்வீடியோ.

Advertisment

ஒரு லிஃப்ட்டில் சராசரி மனிதனும், சிலந்தி மனிதனும் பயணிக்கிறார்கள். அப்போது சராசரி மனிதன் “வலைகளை உருவாக்கி அதில் தானே எப்போதும் பயணிப்பீர்கள். இப்போது ஏன் இப்படி லிஃப்ட்டில் செல்கிறீர்கள்” என்று கேட்கிறார். அதற்கு ஸ்பைடர்மேன், இல்லை, வெளியே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் பிடித்தால் அடித்துவிடுவார்கள் என்கிறார். அருகில் இருக்கும் நபர், உங்களை பிடித்தால் தானே அடிக்க முடியும் என்று கேட்கிறார். அதற்கு ஸ்பைடர்மேன் அப்படியெல்லாம் இல்லை. உண்டிவில் வைத்தே அடித்துவிடுவார்கள் என்று கூறுகிறார்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த வீடியோ சிரிக்க வைக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது என்பதால் நெட்டிசன்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: