லாம்போகினி சொகுசு கார் தான்... ஆனாலும் ஆபத்திற்கு உதவும் ஆம்புலன்ஸூம் கூட!

இந்த மனிதாபிமான நிகழ்வைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவியுங்கள்!

இந்த மனிதாபிமான நிகழ்வைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவியுங்கள்!

author-image
WebDesk
New Update
viral video of Italian police transport kidney in Lamborghini

Italian police transport kidney in Lamborghini : உலகில் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது லாம்போகினி. மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இதன் விலையும் அனைவருக்கும் சற்று தலைச்சுற்றை தான் ஏற்படுத்தும். ஆனால் மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அதன் விலையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று தான் கூற வேண்டும்.

Advertisment

அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் காத்துக் கொண்டிருந்த நோயாளி ஒருவருக்கு உயிர்காக்கும் வாகனமாக உதவியுள்ளது இந்த லாம்போகினி கார். ஆம். இத்தாலியில் அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருந்த நோயாளி ஒருவருக்கு சிறுநீரகத்தை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல இத்தாலி காவல்துறையினர் அவர்களின் லாம்போகினி காரை பயன்படுத்தியுள்ளனர்.

Advertisment
Advertisements

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவேற்றி சில மணி நேரங்கள் கூட ஆகாத நிலையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேலானோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். மேலும் பலரும் இத்தாலி காவல்துறையினரின் இந்த மகத்தான சேவையை மனதார பாராட்டியுள்ளனர். இந்த மனிதாபிமான நிகழ்வைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவியுங்கள்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Automobile Lamborghini

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: