New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/king-cobra-pixabay.jpg)
கடந்த ஆண்டு நடைபெற்ற அந்த ஆய்வின் வீடியோவை தற்போது கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேரளாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர் நீங்கள் என்றால் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த கொலை சம்பவம் உங்களுக்கு நியாபகம் இருக்கும். வரதட்சணையாக கொடுத்த நகையை அபகரிக்க தன்னுடைய மனைவியை பாம்பை ஏவி கொன்றார்.
அந்த கணவர் குறித்தும் உங்களுக்கு நியாபகம் இருக்கலாம். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 25 வயதான உத்ராவை இரண்டு முறை பாம்பு கடிக்க, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினார்கள் அவருடைய குடும்பத்தினர். பிறகு மூன்றாவது முறையாக நல்ல பாம்பை ஏவி உத்ராவை கடிக்க விட்டு தன்னுடைய மனைவியை கொலை செய்தார் உத்ராவின் கணவர் சூரஜ்.
இந்த கொலையில் இருக்கும் மர்மமங்களை அறிய கேரள போலீஸ் மிக முக்கிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, டம்மி கை ஒன்றை தயார் செய்து உண்மையான பாம்பு ஒன்றை வைத்து அதனை வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அந்த கை உத்ராவின் கை எடை அளவில் உருவாக்கப்பட்டது. மேலும் அதன் மேல் ஒரு சிக்கன் துண்டு கட்டி வைக்கப்பட்டது. இயற்கையாகவே பாம்பு தீண்டுவதற்கும், பாம்பை கடிக்க பழக்கி அதன் மூலம் தீண்டுவதற்கும் இடையே இருக்கும் ஆழம் குறித்து அறிய இந்த ஆய்வு காவல்துறையினருக்கு உதவியது. கடந்த ஆண்டு நடைபெற்ற அந்த ஆய்வின் வீடியோவை தற்போது கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இயல்பாக ஒரு பாம்பு மனிதனை தற்காப்புக்காக கடிக்கும் போது 1.7 செ.மீ என்ற அளவில் தான் ஆழமாக பல் பதியும். ஆனால் உத்ராவின் கைகளில் இருந்த இரண்டு பாம்பு கடி காயங்கள் 2.8 மற்றும் 2.5 செ.மீ ஆழம் கொண்டவை. உத்ரா மற்றும் சூரஜ் உத்ராவின் வீட்டில் தங்களின் ஒன்றரை வயது மகனுடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது பாம்பு உத்ராவை கடித்துவிட்டு ஜன்னல் வழியாக தப்பிச் சென்றதாக கூறினார் சூரஜ். ஆனால் அவர்கள் ஏ.சி. அறையில் தூங்கியதால், இந்த மரணம் குறித்து சந்தேகம் அடைந்த உத்ராவின் பெற்றோர்கள் காவல்துறையில் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.