New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/image.jpg)
சுப்ரியா போன்றவர்களால் தான் இன்று நாட்டில் மழையே பெய்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளனர் நெட்டிசன்கள்
viral video of kerala woman running to stop the bus for blind man : செவ்வாய் கிழமையன்று கேரள பெண் ஒருவர் ஓடிக் கொண்டிருக்கும் பேருந்தை நிறுத்த ஓடி வரும் காட்சியும், பேருந்தை நிறுத்திய பிறகு அவர் வயதான முதியவரை கை பிடித்து அழைத்து பேருந்தில் ஏற்றும் காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் திருவல்லாவின் துக்கலசேரி பகுதியை சேர்ந்தவர் சுப்ரியா. திருவல்லாவில் அமைந்திருக்கும் ஜாலி சில்க்ஸில் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்த அவர், பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் பார்வையற்ற முதியவர் ஒருவரை சந்தித்துள்ளார்.
அந்த முதியவர் தன்னால் பேருந்தில் ஏற முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். பத்தினம் திட்டாவில் உள்ள மஞ்சடி பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அப்போது அவர்களை தாண்டி மஞ்சடிக்கு செல்ல வேண்டிய பேருந்து சென்று கொண்டிருக்க, சிறிதும் தயங்காமல் புடவையை பிடித்த படி சாலையில் ஓடிச் சென்று பேருந்தை நிறுத்தியுள்ளார்.
நடத்துனர் ரெமோல்ட் சுப்ரியாவிடம் விசயத்தை கேட்க, ஓட்டுநர் சுனில்குமாரை வண்டியை நிறுத்த சொல்லியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுப்ரியா அந்த முதியவரை கைப்பிடித்து அழைத்து பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுப்ரியா போன்றவர்களால் தான் இன்று நாட்டில் மழையே பெய்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.