viral video of landslide sweeping away homes in Atami, Japan : ஜப்பானில் சனிக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது, ஜப்பானின் மத்திய நகரமான அதாமியில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மொத்தமாக அடித்து செல்லப்பட்டுள்ளது. பேரழிவு மேலாண்மை குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ அப்பால் அமைந்துள்ள சிசோக்காவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கிய 20 நபர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் வெள்ளநீர் மொத்தமாக அந்த பகுதியில் உள்ள வீடுகளை அடித்துச் செல்லும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
கல், மண், பாறை என அனைத்தையும் உருட்டிக் கொண்டு வந்த அந்த கட்டாற்று வெள்ளம் கட்டிடங்களை நொருக்கி இழுத்துச் செல்லும் காட்சிகள் மனதை பதைபதைக்க வைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil