New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/02/cats-5.jpg)
டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த “ஸ்கையிங் குடும்பத்தில்” தற்போது அவரின் 1 வயது தம்பியும் இணைந்து அசத்தி வருகிறார். இந்த குழந்தையின் தன்னம்பிக்கையை கண்டு பிரம்மிப்படைந்த நெட்டிசன்கள் இக்குழந்தையை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
Viral video of Little girl’s motivation talk: அவ்ப்ரின் என்ற நான்கு வயது சுட்டிக் குழந்தை தன்னுடைய பெற்றோர்களுடன் மவுண்ட் ரெய்னீர் தேசிய பூங்காவின் வொய்ட் பாஸ் ஸ்கை ஏரியாவில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்ப்ரினின் ஸ்னோசூட்டில் மைக்ரோபோனை பொருத்தியுள்ளனர் அவர்களின் பெற்றோர்கள். ஸ்கையிங் செய்யும் போது அவருடைய மனம் எங்கே செல்கிறது, அவர் என்ன பேசுகிறார் என்று கேட்பதற்காக இது பொருத்தப்பட்டுள்ளது.
அந்த சின்னக் குழந்தை, பனி மூடிய மலைப் பகுதியில் அழகாக ஸ்கையிங்க் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் “நம்முடைய ரகசிய பாதையில் பயணிபோம்” என்று தனக்கு தானே ஒரு பாடல் ஒன்றை பாட ஆரம்பிக்கிறார்.
நான் கீழே விழமாட்டேன்… என்று தனக்கு தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறும் அவர், அப்படியே கீழே விழவும் செய்யலாம். ஆனால் அது பரவாயில்லை. ஏன் என்றால் நாம் அனைவரும் கீழே விழத்தான் செய்கிறோம் என்று கூறுகிறார். ஒரு கட்டத்தில் அவர் கீழே விழவும் செய்கிறார். ஆனால் சற்றும் பயம் ஏதும் இல்லாமல் மீண்டும் எழுந்து சிரித்த வண்ணம் தன்னுடைய ஸ்கையிங் பொழுதுபோக்கை தொடர்வது நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த “ஸ்கையிங் குடும்பத்தில்” தற்போது அவரின் 1 வயது தம்பியும் இணைந்து அசத்தி வருகிறார். இந்த குழந்தையின் தன்னம்பிக்கையை கண்டு பிரம்மிப்படைந்த நெட்டிசன்கள் இக்குழந்தையை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
18 மாதங்களில் இருந்தே எங்களின் மகள் ஸ்கையிங் செய்து வருகிறார் என்று அவரின் பெற்றோர்கள் ராபர்ட் மற்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளனர். அவர்தான் வாரத்திற்கு ஒரு முறை ஸ்னோபோர்டிங் செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார். அதனால் தான் குழந்தைகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது அதிக அளவில் நாங்கள் ஸ்கேட்டிங் செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.