Viral video of Man rides bicycle ride: தலையில் ஒரு மூட்டை லோடை வைத்துக் கொண்டு மிகவும் லாவகமாக சைக்கிளை ஓட்டிச் செல்லும் நபரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தலையில் இத்தனை சுமையுடன் மிகவும் ஜாலியாக சைக்கிள் ஓட்டிச் செல்லும் இந்த நபருக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
”யாருக்கு சூப்பர் ஹீரோக்கள் வேண்டும் “ என்று இன்ஸ்டகிராமில் சார்காஸ்டிக்கல்ஸ்கூல் என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் கேப்ஷனோடு குறிப்பிட்ட இன்ஸ்டகிராம் மட்டுமின்றி டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் இது வைரலானது.
மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து, அதில் நம் நாட்டில் இது போன்று நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு சரியான நேரத்தில் பயிற்சியும் வாய்ப்பும் அளிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஜிம்னாஸ்ட்களாகவும் விளையாட்டித் துறையினராகவும் மாறியிருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil