New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/12/tennis-with-cricket-bat.jpg)
ஸ்காட்லாந்து கிரிக்கெட் ஏ பிரிவு அணியினரும் எடின்பர்க் நேப்பியர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்களும் கிரிக்கெட் மட்டையில் டென்னிஸ் ஆடும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Viral video of men playing tennis: கிரிக்கெட்டுக்கும், டென்னிஸ்க்கும் ஒரு குழந்தை பொறந்தா? இப்படி ஒரு கேப்சனில் ஒரு வீடியோ. என்னடா என்று கவனித்தால் நான்கு நபர்கள், உள்விளையாட்டு அரங்கம் ஒன்றில் வலைகளுக்கு பதிலாக இருக்கைகளை வைத்து பிரித்து, இந்த பக்கம் இரண்டு பேர், அந்த பக்கம் இரண்டு பேர் என டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியரியம் இருக்கிறது என்று கேட்கின்றீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு தான் இந்த வீடியோ.
If tennis and cricket had a baby...pic.twitter.com/mrakL50x2Q
— Aatif Nawaz (@AatifNawaz) December 14, 2021
கலப்பு இரட்டையர்களின் டென்னிஸ் போட்டிகள் போன்று நான்கு பேரும் கிரிக்கெட் மட்டையில் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கிரிக்கெட் வர்ணனையாளர் ஆட்டிஃப் நவாஸ் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சானியா மிர்சா - சோயப் மாலிக் தம்பதியினரின் குழந்தை விளையாட சரியான விளையாட்டு இது தான் என்றும் சிலர் கமெண்ட் தெரிவித்துள்ளனர்.
ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி தேர்வரும் பயிற்சியாளருமான டோபி பெய்லி எடுத்த இந்த வீடியோவை நவாஸ் பதிவிட்டார். ஸ்காட்லாந்து கிரிக்கெட் ஏ பிரிவு அணியினரும் எடின்பர்க் நேப்பியர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்களும் கிரிக்கெட் மட்டையில் டென்னிஸ் ஆடும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Son of sania Mirza & shoaib malik.
— Prayag (@theprayagtiwari) December 14, 2021
#batminton the game usually takes 10-15 mins depending on how good the players are. Great warm up and brilliant for foot movement, bat face control and accessing the ball to play against spin. #batminton
— Toby Bailey (@Tobybailey76) December 14, 2021
@realshoaibmalik and @MirzaSania would be hard to beat in this sport😍😍
— Dr. Drake Ramooray (@science_daan) December 14, 2021
Imagine if there was actually an Olympic Sport Like this we Cricket Fans would be like so happy to see Cricket in Olympics with a Mix of Tennis in middle so good 👍 👌 😍 🤩😅
— Samish Santhosh (@Samishsanthosh1) December 14, 2021
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.