எங்களுக்கெல்லாம் ஒரு மணி நேரம் போதும்; பிறந்ததும் நடைபழகும் யானை - வைரல் வீடியோ
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் பிறந்து ஒரு மணி நேரம் கூட ஆகாத யானை எழுந்து நிற்க அதன் அம்மா உதவும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
viral video of mother elephant helping new born calf : யானைகள் மிகச்சிறந்த குடும்ப அமைப்பைக் கொண்டிருக்கும் விலங்குகள். நிறைமாத கர்ப்பமாக இருக்கும் யானைக்கு பிரசவம் என்றால் மற்ற பெண் யானைகள் அதற்கு பாதுகாப்பாய் இருக்கும். மேலும் குட்டி யானைகளை வளர்க்கும் பொறுப்பை அனைத்து யானைகளும் பங்கிட்டு செய்யும்.
Advertisment
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் பிறந்து ஒரு மணி நேரம் கூட ஆகாத யானை எழுந்து நிற்க அதன் அம்மா உதவும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
யானைகள் பெரும்பாலும் பிறந்து வெறும் 20 நிமிடங்களில் எழுந்து நிற்க பழகிவிடும். 1 மணி நேரத்தில் நடக்கவும் கற்றுக் கொள்ளும். இரண்டு நாட்களில் குழு உறுப்பினர்களுடன் இணைந்து உணவு தேடி பயணப்படும் வகையில் தகவமைப்பு அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்தும் அம்மா யானையின் செயல்பாடுகள் குறித்தும் உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil